CMWSSB Recruitment 2026: 108 அருமையான APPRENTICES வேலைவாய்ப்புகள் – B.E/B.Tech, Diploma தகுதி | தேர்வு இல்லை!

வெளியானது · 1 மாதங்களுக்கு முன்
புதுப்பிப்பு

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) மூலம் 108 அப்ரண்டிஸ் (Apprentice) காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ கிடையாது. கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவர்.

CMWSSB Recruitment 2026 108 Apprentice Vacancies for BE BTech Diploma
CMWSSB Recruitment 2026 – 108 Apprentice காலியிடங்கள் | B.E/B.Tech, Diploma தகுதி

CMWSSB Recruitment 2026 – முக்கிய விவரங்கள்

விவரம் தகவல்கள்
நிறுவனம் Chennai Metropolitan Water Supply and Sewerage Board (CMWSSB)
பணியின் பெயர் Graduate Apprentice & Technician (Diploma) Apprentice
மொத்த காலியிடங்கள் 108
பயிற்சி காலம் 1 ஆண்டு (1 Year Training)
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (NATS Portal வழியாக)
விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி 17.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2026

காலியிடங்கள் & சம்பளம் (Stipend) விவரம்

பதவி பிரிவு காலியிடங்கள் மாத சம்பளம் (Stipend)
Graduate Apprentice
(B.E / B.Tech)
Civil / Mechanical Engineering 52 ₹12,300/-
Electrical & Electronics Engineering (EEE) 24
Technician Apprentice
(Diploma)
Civil Engineering 10 ₹10,900/-
Electrical & Electronics Engineering (EEE) 22
மொத்தம் 108 –

தகுதி வரம்புகள்

  • கல்வித் தகுதி:
    • Graduate Apprentice: B.E / B.Tech (Civil / Mechanical / EEE) Full-Time தேர்ச்சி.
    • Technician Apprentice: Diploma (Civil / EEE) Full-Time தேர்ச்சி.
  • தேர்ச்சி பெற்ற ஆண்டுகள்: 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இருப்பிடம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
  • அனுபவம்: ஏற்கனவே அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் அல்லது 1 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

தேர்வு முறை & விண்ணப்பக் கட்டணம்

தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது (No Exam / No Interview). Diploma / B.E / B.Tech படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை (FREE).

எப்படி விண்ணப்பிப்பது?

  • தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி இணையதளமான nats.education.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.
  • NATS போர்ட்டலில் Student Registration செய்து 12-digit Enrolment Number பெற வேண்டும்.
  • உள்நுழைந்த (Login) பிறகு “Apply Against Advertised Vacancies” பகுதிக்குச் செல்லவும்.
  • அதில் “CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD” (Establishment User ID: STNCHS000035) எனத் தேட வேண்டும்.
  • ‘Apply’ பொத்தானைக் கிளிக் செய்து 17.10.2026-க்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலை அறிவிப்புகளை உடனே பெறுங்கள்!