Home / Update

BRO Recruitment 2026: 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசு எல்லைச் சாலைகள் அமைப்பு துறையில் வேலை – 899 காலியிடங்கள் | கடைசி தேதி 04.07.2026

WhatsApp Group: Get Job & Results instantly. Join Now

BRO Recruitment 2026: மத்திய அரசின் கீழ் செயல்படும் Border Roads Organisation (BRO) – எல்லைச் சாலைகள் அமைப்பு துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. BRO Recruitment 2026 அறிவிப்பின் மூலம் மொத்தம் 899 Draughtsman, Hindi Typist, Store Keeper Technical (SKT), Operator Communication, Operator Excavating Machinery (OEM), Electrician உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் 21 மே 2026 முதல் 04 ஜூலை 2026 வரை ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

BRO Recruitment 2026 – முக்கிய விவரங்கள்

விவரம்தகவல்
நிறுவனம்Border Roads Organisation (BRO)
அறிவிப்பு எண்01/2026
வேலை வகைமத்திய அரசு வேலை
Central Govt Jobs
பணியிடம்இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள்899
விண்ணப்பிக்கும் முறைOffline
விண்ணப்ப தொடக்க தேதி21.05.2026
கடைசி தேதி04.07.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்www.bro.gov.in

BRO Recruitment 2026 – காலியிடங்கள் விவரங்கள்

எல்லைச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
டிராப்ட்ஸ்மேன் (Draughtsman)42
ஹிந்தி டைப்பிஸ்ட் (Hindi Typist)10
ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் (SKT)100
ஆபரேட்டர் கம்யூனிகேஷன் (Operator Communication)261
ஆபரேட்டர் எக்ஸ்கவேட்டிங் மெஷினரி (OEM)207
எலக்ட்ரீஷியன் (Electrician)79
மொத்த காலியிடங்கள்899

BRO Recruitment 2026 கல்வித் தகுதி:

Draughtsman

  • 12ம் வகுப்பு (Science)
  • Architecture அல்லது Draughtsmanship துறையில் 2 ஆண்டு சான்றிதழ்
  • அல்லது Draughtsman (Civil) NTC மற்றும் 1 ஆண்டு அனுபவம்

Hindi Typist

  • 12ம் வகுப்பு தேர்ச்சி
  • கணினியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஹிந்தி தட்டச்சு திறன்

Store Keeper Technical (SKT)

  • 12ம் வகுப்பு தேர்ச்சி
  • வாகனங்கள் மற்றும் பொறியியல் உபகரணங்களுக்கான Store Keeping அறிவு

Operator Communication

  • 10ம் வகுப்பு தேர்ச்சி
  • ITI Wireless Operator / Radio Mechanic சான்றிதழ் அல்லது சமமான தகுதி

Operator Excavating Machinery (OEM)

  • 10ம் வகுப்பு தேர்ச்சி
  • கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle License)
  • Excavator அல்லது Dozer இயக்க அனுபவம்

Electrician

  • 10ம் வகுப்பு தேர்ச்சி
  • ITI Auto Electrician சான்றிதழ்
  • குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம்

வயது வரம்பு விவரங்கள்:

எல்லைச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2026 அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது கணக்கீடு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும், SC/ST, OBC, PwBD, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

வயது தளர்வு

பிரிவுதளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC (NCL)3 ஆண்டுகள்
PwBD (UR)10 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர்அரசு விதிப்படி

BRO Recruitment 2026 – ஊதிய விவரங்கள்

Post NamePay Scale (Including Grade Pay)
Draughtsman₹5,200 – ₹20,200 + Grade Pay ₹2,800
Hindi Typist₹5,200 – ₹20,200 + Grade Pay ₹1,900
Store Keeper Technical (SKT)₹5,200 – ₹20,200 + Grade Pay ₹1,900
Operator Communication₹5,200 – ₹20,200 + Grade Pay ₹1,900
Operator Excavating Machinery (OEM) (Ordinary Grade)₹5,200 – ₹20,200 + Grade Pay ₹1,900
Electrician₹5,200 – ₹20,200 + Grade Pay ₹1,900

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர் வகைகட்டணம்
SC / ST / Ex-Servicemen / PwBDகட்டணம் இல்லை
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்ரூ.50

BRO Recruitment 2026 தேர்வு செயல்முறை:

BRO ஆட்சேர்ப்பில் தேர்வு பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் நடைபெறும்:

  1. எழுத்துத் தேர்வு (Written Examination)
  2. உடற்திறன் தேர்வு (PET)
  3. உடல் அளவீடு (Physical Measurement)
  4. தொழில்திறன் தேர்வு (Trade Test)
  5. ஆரம்ப மருத்துவ பரிசோதனை (PME)
  6. ஆவண சரிபார்ப்பு (Document Verification)
  7. நியமனம் மற்றும் பணியில் சேர்த்தல்

முக்கிய தேதிகள்:

நிகழ்வுதேதி
விண்ணப்ப தொடக்க தேதி21.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி04.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

எல்லைச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

  • BRO-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான **www.bro.gov.in**-இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தை A4 அளவிலான 75 GSM Bond Paper-இல் ஒரே பக்கத்தில் மட்டும் அச்சிட வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • கல்வித் தகுதி, வயது சான்று, சமூகச் சான்று மற்றும் பிற தேவையான ஆவணங்களின் சுயசான்றளிக்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
  • விண்ணப்ப உறையின் மேற்பகுதியில் Advertisement No. 01/2026 மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் (Postal Service) மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Commandant, GREF Centre,
Dighi Camp, Pune – 411015

Punjab and Sind Bank Notification & Application Link:

விவரம்தகவல்
BRO-அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம்:Click Here
Online Payment of Application:Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

ஏன் இந்த BRO வேலைவாய்ப்பை தவறவிடக்கூடாது?

  • மத்திய அரசு நிரந்தர வேலை
  • 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்
  • இந்தியா முழுவதும் பணியிட வாய்ப்பு
  • அரசு ஊதியம் மற்றும் சலுகைகள்
  • அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை
  • பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு

Frequently Asked Questions (FAQs)

1. BRO Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?

BRO Recruitment 2026 அறிவிப்பின் மூலம் மொத்தம் 899 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2. BRO வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் ITI தகுதி பெற்ற இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்.

3. BRO Recruitment 2026 விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

04 ஜூலை 2026 விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4. விண்ணப்பிக்கும் முறை என்ன?

விண்ணப்பதாரர்கள் Offline முறையில் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

5. BRO பணியிடங்களுக்கான வயது வரம்பு என்ன?

பொதுவாக 18 முதல் 27 வயது வரை. அரசு விதிகளின்படி வயது தளர்வும் வழங்கப்படும்.

Leave a Comment