Anganwadi Vacancy 2025: அங்கன்வாடி பணியிடங்கள் தொடர்பான முக்கிய தகவல் – அமைச்சர் விளக்கம்
Anganwadi Vacancy 2025: அங்கன்வாடி மையங்கள் தொடர்பாக வெளியான தவறான தகவல்களுக்கு விளக்கம் வழங்கியுள்ள தமிழக அமைச்சர் பி.கீதா ஜீவன், தமிழகம் முழுவதும் உள்ள 7,783 காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Contents
👉 Anganwadi Vacancy 2025: அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதில்லை!
சமீபத்தில் சில ஊடகங்களில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகின்றன என பரவிய செய்தி குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் பி.கீதா ஜீவன், “அது முற்றிலும் பொய்யான செய்தி” என உறுதியாகக் கூறியுள்ளார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அங்கன்வாடி மையங்களும் தொடர்ச்சியாக இயங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
👉 தற்போது தமிழகம் முழுவதும் 54,483 மையங்கள்
2021 ஆம் ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றபோது, தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் இருந்தன. அதன் பின்னர் 44 புதிய மையங்கள் தொடங்கப்பட்டு, தற்போதைய மையங்களின் எண்ணிக்கை 54,483 ஆக உயர்ந்துள்ளது.
👉 மையங்கள் மூடப்படுவது குறித்து வெளியான செய்தி தவறு
சில செய்தித்தாள்களில் இந்த ஆண்டில் 501 மையங்கள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதை முற்றிலும் மறுக்கும் அமைச்சர், “அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. எந்த மையமும் மூடப்படவில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
👉 மையங்களை இடமாற்றம் செய்ய மத்திய அரசின் அனுமதி
மாநிலமெங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்களின் தேவையை பொருத்து சில மையங்கள் இடம் மாற்றப்படும். இதற்காக மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
👉 புதிய பகுதிகளில் புதிய மையங்கள்
மக்கள் நகரமயமாகும் நிலையில், குறைந்த பயனாளிகள் உள்ள பகுதிகளில் இரண்டு மையங்களை இணைத்து, புதிய இடங்களில் புதிய மையங்களைத் தொடங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
👉 மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
மலைப்பகுதிகள், தூரவூர்கள் மற்றும் பயனாளிகள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் மையங்களை ஏற்படுத்தும் வகையில் கடந்த 6 மாதங்களாக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு மறுசீரமைப்பு முயற்சியாகவே நடைபெற்று வருகிறது.
👉 தமிழக அரசு தொடர்ந்து குழந்தைகள் மையங்களை நடத்தும்
இந்த மறுசீரமைப்புகள் இன்னும் நடைமுறையில் வரவில்லை. நடைமுறைக்கு வந்தபின்பும், தற்போதைய 54,483 குழந்தைகள் மையங்களை தொடர்ந்து இயக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது.
👉 7,783 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
அதற்கிடையில், தற்போது 7,783 காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் பி.கீதா ஜீவன் உறுதியளித்துள்ளார்.
Official Page: Click Here
Follow our page for more such government and private job opportunity news. Click Here